மக்களுக்கான இலவச கொடுப்பனவுகள்
-
குறைந்த வருமானம் பெறும் மக்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.
-
விண்ணப்ப் படிவத்தை பூர்த்தி செய்து கிராம சேவகரின் சிபாரிசுடன் இந்தப் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவுக்கு வழங்க வேண்டும்.
-
60 வயதிற்கு குறைந்த ஒரு நபர் மருத்துவ அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது,மருத்துவ சான்றிதழைப் சமப்பிக்க வேண்டும்
நன்கொடை (சக்கர நாற்காலிகள் / கொக்கிகள் /மூக்குக் கண்ணாடிகள் / ஊன்றுக்கோள்)
- குறைந்த வருமானம் பெறுபவரானக இருத்தல்
- உபகரணங்கள் பயன்படுத்த மருத்துவ சான்றிதழ்.
- விண்ணப்பப் படிவத்துடன் கிராம உத்தியோகத்தர் பரிந்துரை
மாணவர்களுக்கான இலவச கொடுப்பனவுகள்
-
தந்தை இழந்த , பள்ளிக் கல்வியைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு இந்தப் புலமைப்பரிசில் வழங்கப் படுகிறது.
-
கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரின் கையொப்பத்துடனான ஒரு கடிதம்
-
பிறப்புச் சான்றிதழின் நகல்
-
தந்தை இறந்துவிட்டால் அல்லது காணாமல் போனால், இறப்புச் சான்றிதழ் அல்லது அது பற்றிய வாக்குமூலம்.
நோய் இலவச கொடுப்பனவுகள்
-
புற்றநோய்,காச நோய், தலசீமியா போன்ற நோய்களுக்கான உதவிகள் வழங்குதல்
-
நோயை உறுதி செய்யும் பொருத்தமான மருத்துவ சான்றிதழ்
-
பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்தல்
-
கிராமிய உத்தயோகத்தரிடமிருந்து குறைந்த வருமானம் பற்றிய சான்றிதழ்.
அங்கனவீனர் வீட்டு உதவி
-
பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்தல்
-
விண்ணப்பதாரர் தனக்கன சொந்த நிலத்தைக் கொண்டிருத்தல் (அது காணியின் உரிமைப்பத்திரத்தை கொண்டு உறுதி செய்யப்பட வேண்டும்)
-
நிலம் இல்லாவிட்டால், நிலம் வழங்குபவருடனான ஒப்பந்தம்(இது பிரதேச செயலாளரால் அல்லது சமூக சேவை உத்தியோகத்தரால் செய்யப்படும்).
-
குறைந்த வருமான பற்றிய கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
-
அங்கவீனம் தொடர்பாக மருத்துவச் சான்றிதழ்.
-
வீட்டுத் திட்டம் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் மதிப்பீடு.
-
வயது சான்றிதழ் அல்லது அடையாள அட்டையின் அட்டையின் பிரதி.
-
ரூ .250,000 க்கு மேலாயின், மீதிப்பணத்தை திரட்டும் முறை பற்றிய ஆவணங்கள்
அங்னவீனர் சுயதொழில் உதவி
-
பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்தல்
-
அங்கவீனம் தொடர்பாக மருத்துவச் சான்றிதழ்.
-
சமூக சேவை உத்தியோகத்தரின் அறிக்கை.
-
சுய வேலைவாய்ப்புக்காக் கோரப்படும் பொருட்களின் விவரங்கள் .
-
விண்ணப் ப் படிவத்தில் சுயதொழில் திட்டம் தொடர்பான அறிக்கை.
-
குறைந்த வருமான பற்றிய கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
ஊனமுற்ற நபர்களுக்கு ரூபா 3000 / = கொடுப்பனவு வழங்கல்
-
ஊனம் தொடர்பாக அரசாங்க மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவ அறிக்கை.
-
குறைந்த வருமான பற்றிய கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
ஒற்றை தாய் தந்தைகளுக்கான சுய வேலைவாய்ப்பு உதவி
-
இந்த உதவி 50 வயதிற்கு குறைவான கணவன் இறந்த அல்லது கணவனால் கைவிடபட்டபெண்களுக்கு வழங்கப்படுகிறது.
-
குறைந்த வருமான பற்றிய கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்.
-
இறப்புச் சான்றிதழ் அல்லது கைவிடப்பட்மைக்கான வாக்குமூலம்.
-
பாடசாலை வயதுக் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அனர்த்த முகாமைத்துவம்
-
உதவி வழங்குதல்.
-
உதவி மற்றும் சோதனைகளுக்கான பரிந்தரை அளித்தல்
-
அறிக்கைகள் வழங்குதல்.


















